ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பெற்ற மகளை மூன்று வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை


மூன்று வருடகாலமாக பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரையே பொலிசார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

12 வயதான சிறுமியையே இந் நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். தனது தந்தையால் இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பில் குறித்த சிறுமி அயல் வீட்டுப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் சிறுமியின் வகுப்பாசிரியரிடம் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் இந்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு கூறியதை அடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

2012ம் ஆண்டு தந்தை தன்னை முதன் முறையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், இதன்போது தாய் தந்தையுடன் முரண்பட்ட நிலையில் வீட்டைவிட்டு வெளியேறியிருந்ததாகவும் சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

பின்னர், தாய் தந்தையுடன் சமாதானம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார் எனக் குறிப்பிட்டுள்ள சிறுமி, எனினும் தாய் இரவில் உறங்கியதும், தன்னை தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாகவும், இதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாக சந்தேகநபரான தந்தை மிரட்டியதாகவும் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

எமக்கு வழங்கியுள்ள பாதுகாப்பிற்கு நன்றி – தமிம் இக்பால்

wpengine

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1 1/2 வயதுக் குழந்தை

wpengine

ரணிலின் அதிரடி தீர்மானம் ; பதவியை பறிக்க நடவடிக்கை

wpengine