உள்நாட்டு செய்திகள்

பெற்றோல் 700 ரூபா! டீசல் 600 ரூபா!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலியந்தலை, சுவாரபொல பிரதேசத்தில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிலியந்தலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 180 லீற்றர் டீசல், 7 லீற்றர் பெற்றோல் மற்றும் எரிபொருளை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் டீசல் ஒரு போத்தல் 600 ரூபாவுக்கும், பெற்றோல் ஒரு போத்தல் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

இலங்கையில் 2674 பேருக்கு கொரோனா

wpengine

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

wpengine

நீதிமன்றம் நஷ்ட ஈட்டுக்கான பணம் ராஜபக்ஷக்களிடம் உள்ளது – சொல்கிறார் சுமந்திரன்..!

wpengine