உள்நாட்டு செய்திகள்

பெற்றோல் கையிருப்பு இல்லை: வரிசையில் நிற்பதில் பயன் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கையிருப்பில் இருந்த பெற்றோல் தீர்ந்துவிட்டதால் பெற்றோலுக்காக வரிசையில் நிற்பதில் எந்தப் பயனும் இல்லை என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள் என்பதால் திங்கட்கிழமை வரை எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது என்றும் நாளை முதல் டீசல் கொண்டு செல்லப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பகத்தில் எஞ்சியிருக்கும் 1000MT பெற்றோல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டில் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

wpengine

Diamond Princess – இலங்கையர்கள் இந்தியாவுக்கு

wpengine

எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்..!

wpengine