உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களிலும் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

W.M.மெண்டிஸ் என்ட் கம்பனியின் நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…

wpengine

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…

wpengine

தொழிற்சங்கங்கள் 25 சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டத்தில்

wpengine