உள்நாட்டு செய்திகள்

200 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வலிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 200மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

கட்சி அரசியல் கைவிடப்பட வேண்டும்: துமிந்த திசாநாயக்க வலியுறுத்தல்

wpengine

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அடுத்த மாதம் வழங்கத் திட்டம்..

wpengine

புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிக்கப்படும் – ராஜித

wpengine