உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை



நாட்டில் ,வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

wpengine

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு – அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம்…

wpengine

குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

wpengine