உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்…


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் வரை பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்து, கடமைக்குத் திரும்புமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோட்டத்தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைப்பெற்றுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும் எனவும், தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரரின் கருத்தால் பரபரப்பு;மிகப்பெரிய அழிவொன்றை சந்திக்க நேரிடும்[VIDEO]

wpengine

கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

தமிழரசின் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பில் வௌியான அறிவிப்பு

Azeem Kilabdeen