வணிகம்

பெரிய வெங்காயத்திற்கு வரலாற்றிலேயே கிடைக்காதளவு ஆகக்கூடிய விலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு வரலாற்றிலேயே கிடைக்காதளவு ஆகக்கூடிய விலை கிடைத்துள்ள நிலையில் பெரிய வெங்காயம் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாக மாத்தளை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.பி.கே. தொடன்வல தெரிவித்துள்ளார்.

இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணம் இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டமையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான உற்பத்திச் செலவு 50 ரூபாவுக்கும் 52 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக அமைந்திருந்த நிலையில், அதிகரித்த விலையில் இடம்பெற்ற கொள்வனவினால் உற்பத்தியாளர்கள் நன்மையடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 170 ரூபாவினையும் தாண்டியது…

wpengine

முதற் கட்டமாக 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி…

wpengine

எலோன் மஸ்க் தனது பெயரை மாற்றிக் கொண்டார்

Azeem Kilabdeen