வாழ்க்கை

பெண்கள் தங்கள் நகங்களை பளிச்சுன்னு வைக்க..



பெண்கள் தங்கள் நகங்களுக்கு நெயில் கலரிங் மற்றும் அழகான வடிவமைப்பு கொடுக்க மிகவும் விரும்புவாங்க. ஒரு பிரஞ்சு நகப்பராமரிப்பு முறை என்ன செல்கிறது என்றால் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு அடர்ந்த நெயில் கலரிங் மற்றும் லேசான ஒப்பனை அழகாக இருக்கும்.

ஒரு ஆரோக்கியமான நகப் பராமரிப்பு முறை என்பது நகங்கள் பொலிவானதாகவும், நெயில் கலரிங் கச்சிதமாகவும் இருக்க வேண்டும். நகங்கள் ஆரோக்கியமாக இருப்பது நம் உடல் நலத்தையும், ஆயுளையும் பிரதிபலிக்கின்றன. அடிக்கடி நகங்களுக்கு நெயில் கலரிங் செய்தல் மற்றும் ரீமுவர் பயன்படுத்துதல் நகங்களை ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடும்.

தேவையான பொருட்கள் :

வெண்மையாக்கும் டூத் பேஸ்ட்
நெயில் பாலிஷ் ரீமுவர்
நகப் பராமரிப்பு கருவி

செய்முறை :

1. முதலில் நெயில் பாலிஷ் ரீமுவரை பயன்படுத்தி நகங்களில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும்.
2. பின்பு பராமரிப்பு கருவி கொண்டு உங்கள் நகங்களை பாலிஷ் செய்ய வேண்டும்.
3. பிறகு நகத்தின் மேல்பகுதி மற்றும் கீழ் பக்கவாட்டு பகுதிகளில் டூத் பேஸ்ட்டை நன்கு தடவி, சின்ன மென்மையான டூத் பிரஷ் கொண்டு நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அப்புறம் நன்றாக கழுவி விட வேண்டும்.
4. இந்த செய்முறையை 10-15 நிமிடங்கள் கழித்து திரும்பவும் செய்து வந்தால் உங்கள் நகங்கள் பளிச்சென்று பொலிவானதாக மாறும்.

(rizmira)

Related posts

இந்த ஒரு மாஸ்க் பருக்களால் வந்த தழும்புகளை உடனே மறையச் செய்யும்…

wpengine

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த மருந்து வேப்ப எண்ணெய்.

wpengine

என்னென்ன உணவு பொருட்களை freezer இல் வைக்கலாம்?

wpengine