விளையாட்டு

புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அணியில் முகமது சமி



(FASTNEWS | COLOMBO) – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவிக்கையில்;

“.. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்து 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக முகமது சமி களம் இறங்குவார்..”

அடுத்து 3 ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஜூன் 22-ம் திகதியும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 27-ம் திகதியும் இங்கிலாந்து அணியுடன் 30-ம் தேதியும் விளையாட உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாகிஸ்தான் களத்தில் சங்கா [PHOTOS]

wpengine

மாலிங்க’வை இழந்து தள்ளாடும் மும்பை இந்தியன்ஸ்..

wpengine

உலக கிண்ண ஹொக்கி தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி..

wpengine