வணிகம்

புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷமனால் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.

நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

விவசாய உபகரணங்களுக்காக விசேட லீசிங் கொடுப்பனவை வழங்க பிரவுன்ஸ் நிறுவனத்துடன் இணையும் HNB

wpengine

பிரபல பஜாஜ் இலத்திரனியல் நிறுவனம் இலங்கையில் கால் பதிக்கிறது..

wpengine

“உதயம் TV” 23ம் திகதி மக்கள் மத்தியில் உதயமாகின்றது…

wpengine