உள்நாட்டு செய்திகள்

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை(22) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை(22) ஆரம்பமாகவுள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு உரிய மத்திய நிலையங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஏற்கனவே குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் ஆகியவற்றில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியிலான ஏனைய பகுதிகளில் 39 மதிப்பீட்டு மத்திய நிலையங்களிலும், 391 மதிப்பீட்டு நிலையங்களிலும், பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், முன்னெடுக்கப்படவுள்ளன.

Related posts

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இணைவு…

wpengine

சுற்றிவளைப்புக்களில் 754 பேர் கைது…

wpengine

மற்றொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது

wpengine