உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டைகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகளில் பரீட்சை இலக்கம் மற்றும் விண்ணப்பதாரிக்கான பரீட்சை மத்திய நிலையம் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை
2936 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

பரீட்சைக்கு3,31,694 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வந்த தொலைபேசி அழைப்பு

News Editor

தனியார் வைத்தியசாலைகள் நிபந்தனைகளை மீறும் போது கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 103 நிறுவனங்கள் சிக்கலில்

wpengine