உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் கொடுப்பனவை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்…


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தற்போது 15,000 ரூபா வழங்கப்படுவதுடன், அதனை 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கான அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களுக்கு புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

காதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு 

wpengine

கோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு

wpengine

நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை…

wpengine