உள்நாட்டு செய்திகள்

புர்கா மற்றும் நிகாப் அணிய குறுகிய நேரத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் எனவும், வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும் போது அவற்றை அகற்ற வேண்டும் என தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்;

“.. புர்கா மற்றும் நிகாப் அணிவதை எங்களால் தடை செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.

வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம். அவரது அடையாளம் அடையாள அட்டையில் முகத்துடன் இணையாக இருக்க வேண்டும். அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும்.

எனினும் மேற்படி நிபந்தனைகளை கருத்திற் கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக் கூடாது..” எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை

wpengine

சாய்ந்தமருது வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு பாதிப்பில்லை…

wpengine

வவுணதீவு பொலிஸ் அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொரு நபர் கைது…

wpengine