உள்நாட்டு செய்திகள்

புனித சிவனொளிபாத யாத்திரை காலம் ஆரம்பமாகிறது.



புனித சிவனொளிபாத யாத்திரை காலம் நாளை ஆரம்பமாகிறது என சிவனொளிபாத பௌத்த வணக்க ஸ்தலத்திற்கு பொறுப்பான விகாராதிபதி சங்கைக்குரிய பெங்கமுவ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை தொடக்கம் பெல்மதுல கல்பொத்தாவெல ஸ்ரீபாத ரஜமஹா விகாரையில் இருந்து புத்த பெருமானின் புனித பொருட்களுடன் கூடியதாக சமன் தெய்வத்தின் உருவச்சிலை ஊர்வலமாக சிவனொளிபாத மலை நோக்கி எடுத்துச் செல்லப்படுவதாக சிவனொளிபாத பௌத்த வணக்க ஸ்தலத்திற்கு பொறுப்பான விகாராதிபதி சங்கைக்குரிய பெங்கமுவ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

இரத்தினபுரி – அவிசாவளை – ஹட்டன் மார்க்கத்தின் ஊடாகவும், பெல்மதுல – பலாங்கொட மார்க்கத்தின் ஊடாகவும், இரத்தினபுரி – பலாபத்தல ரஜமாவத்தை ஊடாகவும் மூன்று பெரஹெராக்கள் இடம்பெறுகின்றன.

சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரியர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்.

இம்முறையும் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என யாத்திரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.

Related posts

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரீலா நிறுவனம் அரசிடம் நட்டஈடு கோருகிறது.

wpengine

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய தடை..

wpengine

அமைச்சர் ரிசாத்தின் பணிப்புரைக்கமைய முள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் ஆராய்வு

wpengine