உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டை முன்னி​ட்டு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், விசேட வேலைத்திட்டங்கள்…



தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னி​ட்டு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கடவத்தை, பின்னதுவ மற்றும் கொடகம ஆகிய பரிமாற்ற மத்திய நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில், உள்நுழைவதற்கும் மற்றும் வெளியேறுவதற்குமாக மேலதிகமான கதவுகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்றும், அதற்காக, பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதரடிப்படையைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்தப்படுவர் என்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்திருந்தார்.

 

####

Related posts

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை

wpengine

200வது நாளாகவும் தொடர்கிறது காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டம்..

wpengine

மதிய இடைவேளை – இலங்கை அணிக்கு இன்னும் 118ஓட்டங்கள் தேவை..

wpengine