உள்நாட்டு செய்திகள்

புத்தளம் – குருநாகல் இடையில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு…



தெதுருஓயா பாலத்தின் புனரமைப்பு காரணமாக போக்குவரத்திற்கான தூரம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்திற்கும் குருநாகலுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நிகவரெட்டிய பகுதியில் பாலம் புனரமைக்கப்படுவதால் பிரதான வீதியுடனான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், 19 கிலோமீற்றர்கள் மேலதிக பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

எனது இராணுவ பாதுகாப்பு தொடர்பான ரகசியம் – மஹிந்த

wpengine

பதவி நீக்கப்பட்ட பிரிகேடியர் துவான் சுரேஸ் சாலி மியான்மார் அனுப்பப்படுகிறார்..

wpengine