வணிகம்

புதிய தானியங்கி கார்களை தயாரிக்கும் முயற்சியில் B.M.W நிறுவனம்…



உலகில் தானியங்கி கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் B.M.W நிறுவனமும் தானியங்கி கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற நிறுவனங்களை போன்று இல்லாமல் B.M.W நிறுவனத்தின் தானியங்கி கார் Level-5 தானியங்கி முறைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மனிதர்களை போன்று எவ்வித சூழ்நிலையிலும் சாதூர்யமாக முடிவுகளை எடுத்து தானாகவே இயங்கும் படி Level-5 தானியங்கி முறை இருக்கும்.

Level-5 தானியங்கி முறைகள், சிறிதளவும் ஓட்டுநரின் ஒத்துழைப்பு இன்றி சாலைகளில் சாதூர்யமாக செல்லும். இந்நிலையில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் தானியங்கி கார்களில் Level-2 அல்லது Level-3 என்ற தானியங்கி முறைகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

Level-2 மற்றும் Level-3 தானியங்கி முறைகளில் ஓட்டுநரின் கவனம் நிச்சயம் தேவை என்பதால் அனைத்து வித சாலைகளிலும் தானியங்கி முறையில் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய தானியங்கி கார்களை தயாரிக்க B.M.W நிறுவனம் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கும் மொபைல் ஐ நிறுவனங்களுடன் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

wpengine

மின்சார அபிவிருத்திகளுக்கு கெனேடியா மற்றும் பிரான்ஸ் அரசு உதவ இணக்கம்…

wpengine

கைத்தொழிற்துறையை மேம்படுத்த சம்மாந்துறையில் இன்கொம் – 2016 மாபெரும் கண்காட்சிக்கு

wpengine