உலக செய்திகள்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 57 பேர் சத்திய பிரமாணம்



(FASTNEWS | COLOMBO) – இந்திய பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திரமோடி, இந்திய ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம் நாத் கோவித் முன்னிலையில் பதவியேற்ற நிலையில், 57 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்களும் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் , அவர்களுக்கான அமைச்சுப்பதவிகள் எவையும் அறிவிக்கப்படவில்லை.

அ.தி.மு.க சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவிந்திரநாத்துக்கு இந்த அமைச்சரவையில் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இந்த பதவி ஏற்பு நிகழ்வில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசத் தலைவர்கள் கலந்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடும் மழை காரணமாக விமான நிலையத்திற்கு பூட்டு

wpengine

அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் இதுவரை 11 பேர் பலி

wpengine

இத்தாலியில் ஏப்ரல் வரை முடக்கம்

wpengine