உள்நாட்டு செய்திகள்

புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்…


உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் பணிகள் இடம்பெறும் இரத்மலானை பிரதேசத்திற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று(17) விஜயம் செய்துள்ளார்.

பயன்படுத்தாத நிலையில் காணப்படும் 200 புகையிரத பெட்டிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன.

இந்தியாவிலிருந்து புகையிரத பெட்டியொன்றை இறக்குமதி செய்ய ஆறு கோடி ரூபா செலவாகிறது. புகையிரத பெட்டியொன்றை இலங்கையில் நவீனமயப்படுத்த நான்கு கோடி 50 இலட்சம் ரூபா மாத்திரமே செலவாகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நவீனமயப்படுத்தப்பட்ட 12 புகையிரத பெட்டிகள் களனி வழி புகையிரத பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக புகையிரத பெட்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இன்னும் தீர்மானமில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு..

wpengine

காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வு மத்திய நிலையம் நிறுவ நடவடிக்கை

wpengine

நாளைய தினத்திற்குள் 5000 ரூபா வழங்கும் செயற்பாடுகள் நிறைவு

wpengine