உள்நாட்டு செய்திகள்

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு ஆலோசனை…


புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் புகையிரத சேவையின் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

30 வருடங்களுக்கும் அதிக காலமாக பல்வேறு காரணங்களினால் பதவியுயர்வுகளைப் பெறாத புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் 284 பேருக்கு, சார்ஜன்களாக பதவியுயர்வு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோது, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் ஆடையில் சேவையில் ஈடுபடும்போது, அநேகமான குற்றச்செயல்கள் அடையாளம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது…

wpengine

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

முன்னாள் நா.உறுப்பினர் சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில்..

wpengine