வணிகம்

புகையிரத திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு…


புகையிரத கட்டணங்கள் அதிகரித்த நிலையில், புகையிரத திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

புகையிரத கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செயப்படும் புகையிரத தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவ்வாறு கொண்டுவரப்படும் புகையிரத தொகுதியின் முதலாவது பரீட்சார்த்த பயணம் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அதன் தரத்தின் அடிப்படையில், எஞ்சிய புகையிரத தொகுதிகளும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமிப்பு..

wpengine

“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

wpengine

இலங்கையிலும் குறைந்த செலவிலான ஜெட்ஸ்டார் விமான சேவை

wpengine