உலக செய்திகள்

புகையிரதம் தடம்புரண்டு விபத்து – 5 பேர் உயிரிழப்பு…


உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் புகையிரத நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 6 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related posts

காஸாவின் ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டனம்..!

wpengine

மீளவும் பிரான்ஸ் முடக்கம்

wpengine

இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

wpengine