உள்நாட்டு செய்திகள்

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – பதுளை பிரதான புகையிரத பாதையில் ஹட்டன் மல்லியைப்பூ சந்தி பகுதியில் இன்று (16) காலை 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து இன்று அதிகாலை பதுளை நோக்கி புறப்பட்டு வந்த புகையிரத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மஸ்கெலியா அப்கோட் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சிவனு கண்ணியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நபர் தண்டவாளத்தில் தலையினை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

wpengine

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கக்கூடும்…

wpengine

ஊடகவியலாளர்களுக்கு இலவச அலைபேசி

wpengine