உள்நாட்டு செய்திகள்

புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு



(ஏ.எல்.எம்.நபார்டீன்)

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்த புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையமளர் ஏ.எம்.எஸ்.நயிமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், கருத்திட்ட உதவியாளர் எம்.எஸ்.எம்.அப்துல்லா, சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எஸ்.எம்.உனைஸ் ஆகியோர்களுக்கு புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மேன்முறையீடுகள் பரிசீலனைக்கு

wpengine

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

wpengine

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்

wpengine