உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மனுத்தாக்கல்


ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத சரத் பொன்சேகாவுக்கு அக்கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வழங்கியமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் தென் மகாணசபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்னவினாலேயே குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்னும், இந்த மனுவில் பிரதிவாதிகளாக  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க திஸாநாயக்க ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

(riz)

Related posts

பிரதமர் மீதொட்டுமுல்ல பகுதிக்கு விஜயம்…

wpengine

தேர்தலுக்கான புதிய திகதி, அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

wpengine

கபீர் ஹஷீம் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine