உள்நாட்டு செய்திகள்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மீள் நிராகரிப்பு



பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இராணுவ நீதிமன்றில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதாகவும் ஆனால் தற்போது தான் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதால் அப்பதவியை மீண்டும் தனக்கு வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கும்படி கோரி சரத் பொன்சேகா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (18) விசாரணைக்கு வந்தபோது மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்மந்தமாக, பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம்..!

wpengine

தோல்வியை அடுத்து ஸ்மித் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பியழைப்பு.

wpengine

எதிர்வரும் 10ம் திகதி விஷேட சபை அமர்வு…

wpengine

1 comment

ravi Jun 18, 2015 at 10:05 pm

நம்பிக்கை துரோகம் இல்லயா

Comments are closed.