உள்நாட்டு செய்திகள்

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை



(FASTNEWS|COLOMBO) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றமையினால் நாடளாவிய ரீதியாக (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

wpengine

ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கோரிக்கை

wpengine

ஆகஸ்ட் 9 இலும் எதிர்ப்பு போராட்டம் – அழைப்புவிடும் சரத் பொன்சேகா!

News Editor