உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு



நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உட்பட சந்தேக நபர்களான மூவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவருக்கும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகியோரே ஏனைய சந்தேக நபர்களாவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) மற்றும் ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் 8ம் திகதி கைது செய்யப்பட்னர்.

குறித்த இருவரும் கைதாகி 3ம் நாள் அக்டோபர் 11ம் திகதி சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான் ) கைது செய்யப்பட்டார்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மேலதிக மஜிஸ்திரேட் எம். ரியாழ் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை சந்திரகாந்தனுக்கு பிணை மனு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீதான ஆட்சேபனை மனுவினை எதிர்வரும் 25ம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அரச தரப்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 16ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நுரைச்சோலை லக்விஜய ஊழியர் ஒருவர் பலி

News Editor

ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை வருகை

Azeem Kilabdeen

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

wpengine