உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்



கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன், கடந்த இரண்டாம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு,

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதிப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Related posts

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

wpengine

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

wpengine

தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பு முனையாக இம்ரான் தாகிரின் ஓவர் அமைந்தது – டிவில்லியர்ஸ்

wpengine