உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் காலம் மீளவும் நீடிப்பு..



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் தொடர்புடைய வழக்கு இன்று(04) நீதிமன்றில் மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 7ம் திகதி வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று அற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பொலிஸ் மா அதிபர்கள் 17 பேருக்கு உடன் இடமாற்றம்…

wpengine

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்த விழா தொடர்பான கலந்துரையாடல்!

wpengine

தென் கொரியா – இலங்கைக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து…

wpengine