உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு



முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவில் எதிர்வரும் 27ம் திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை எதிர்வரும் 26ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Related posts

ஈரான் பராளுமன்றினுள் தீவிரவாதத் தாக்குதல் – 12 பேர் பலி..

wpengine

ரவூப் ஹக்கீம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இலங்கை முகவராக இருக்கலாம் – முஸம்மில்

wpengine

புதிய அமைச்சரவை நியமனம் புதனன்று

wpengine