உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (02) இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய காணொளி அழைப்பின் ஊடாக மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மே 11 ஆம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார்.

Related posts

லலித் மற்றும் குகன் விவகாரம் – கெஹெலிய நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

wpengine

இலங்கையில் அடுத்த மலிங்க தயார்; இந்திய ஊடகங்கள் அதிர்ச்சி [VIDEO]

wpengine

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Azeem Kilabdeen