உள்நாட்டு செய்திகள்

பிலியந்தலை துப்பாக்கி பிரயோக – காயமடைந்த சிறுமி உயிரிழப்பு..



பிலியந்தலை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று(19) உயிரிழந்துள்ளார்.

குறித்த 11 வயதுடைய சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு எதிராக பிலியந்தலை – மொரட்டுவ வீதியில் அரச வங்கிக்கு அருகில் குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.

அந்த தருணத்தில் அருகில் இருந்த கடையில் நின்றிருந்த சிறுமியின் மீது துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது.

அதில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்தார்.

 

(rizmira)

Related posts

யாழ். பல்கலைகழக மாணவர்களின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்…

wpengine

கடும் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை தொடரும்..

wpengine

கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கரின் இலங்கை விஜயம் குறித்து சந்தேகம்

wpengine