உலக செய்திகள்

பிரேசிலுக்கான தூதரை திரும்ப அழைக்கும் துருக்கி



ஆர்மீனியர்களை துருக்கிய ஒட்டமன் பேரரசு “இனப் படுகொலை’ செய்ததாக பிரேசில் நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து அந்நாட்டுக்கான தனது தூதரை துருக்கி திரும்ப அழைத்துக் கொண்டது.

இதுகுறித்து துருக்கி நாட்டின் வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆர்மீனியர்கள் படுகொலை குறித்து பிரேசில் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அது ஒரு “இனப்படுகொலை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றைத் திரித்து பிரேசில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது குறித்து ஆலோசிப்பதற்காக அந்நாட்டுக்கான துருக்கி தூதர் ஹுசைன் டிரியாஸ் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார் என அவர் தெரிவித்தார்.

முதல் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் துருக்கிய ஒட்டமன் பேரரசு ஆட்சி நடைபெற்ற ஆர்மீனியாவில், அந்த நாட்டைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்வை “இனப்படுகொலை’ என பிரேசில்,செனட் சபை குறிப்பிட்டுள்ளதால் அந்நாட்டின் தூதரை துருக்கி திரும்ப அழைத்துள்ளது.

Related posts

ஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொவிட் 19

wpengine

விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு…

wpengine

வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா..

wpengine