உலக செய்திகள்

பிரேசிலில் 43 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்



(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரேசில் ) – பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 43,389 ஆக பதிவாகியுள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.65 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.37 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Related posts

உலகில் முதன் முறையாக 5G வலைப்பின்னல் நாளை(05) அறிமுகம்..

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்..

wpengine

காவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம்…

wpengine