ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!



‘கண்களால் கைது செய்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகில் பிரபலமானவர் பிரியாமணி. ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். ‘அது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ஆறுமுகம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. மூன்று கன்னட படங்களில் நடித்து வருகிறார். பிரியாமணி திருமணத்துக்கு தயாராகிறார் என்றும், வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த முஸ்தபா என்பவருடன் பிரியாமணிக்கு நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி சந்தித்தனர். ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். நெருக்கமாக இருப்பது போன்ற படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் இருவரும் காதலிப்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தனர். தற்போது முஸ்தபாவுடனான காதலை பிரியாமணி வெளியிட்டதுடன், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:- ‘‘நானும் முஸ்தபாவும் காதலிக்கிறோம். இருவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தோம். ஆரம்பத்தில் நட்பாக பழகினோம். பிறகு காதல் வயப்பட்டோம். நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இந்த வருடம் இறுதியில் எங்கள் திருமணம் நடக்கும். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்’’.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.

Related posts

சகலதுறை ஆட்டக்காரர் நுவான் குலசேகரவுக்கு 37!

wpengine

தலைமையில் இருந்து மைத்திரி இராஜினாமா

wpengine

திசைமாறும் வஸீம் தாஜுதீனின் படுகொலை வழக்கு

wpengine