கேளிக்கை

பிரியங்கா சோப்ரா பொய்காரி’யாக…



(FASTGOSSIP | COLOMBO) – பிரியங்கா சோப்ரா தனது 37-வது பிறந்த தினத்தினை கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மியாமியில் கொண்டாடியுள்ளார். இதில் பிரியங்காவின் அம்மா மது சோப்ரா, தங்கை பரினீத்தி ஆகியோர் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்று கலந்து கொண்டுள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரியங்கா சிகரெட் பிடிக்க, அவரின் கணவரும், அம்மாவும் சுருட்டு பிடித்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த படங்களுக்கு வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

“பிரியங்கா சோப்ரா இந்தி படங்களில் நடித்தபோது, “யாரும் புகைப்பிடிக்க வேண்டாம்” என்றார். ஹாலிவுட்டுக்கு சென்ற பிறகு புகை பிடிப்பதால் தனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது என்றும், அதற்கு மருந்து சாப்பிடுகிறேன் என்றும் ஏற்கனவே கூறியிருந்தார். புகைப்பிடிப்பவர்களை கண்டால் தனக்கு பிடிக்காது என்றும் கூறியிருந்தார். அப்படிப்பட்டவர் புகைப்பிடிக்கலாமா? நன்றாக நடிக்கிறார்” என்றெல்லாம் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்து புகை மாசுவை ஏற்படுத்தாமல் விளக்குகள், லட்டு வழங்கி அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி விட்டு, அவர் மட்டும் குடும்பத்தினருடன் ‘தம்’ அடிக்கலாமா? என வைரலாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related posts

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் காலமானார்

wpengine

உலகில் உள்ள 25 அழகிய மொடல் அழகிகள் இவர்கள் தானாம்…

wpengine

‘LIPSTIC UNDER MY BURKHA’ பாலியல் விருப்பங்களுக்கான தீனியா

wpengine