விளையாட்டு

பிரித்தானிய அணியில் இணையும் மலிங்க, மோர்கன் உள்ளிட்ட பிரபல வீரர்கள் இதோ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானியாவில் தொடங்கவுள்ள 100 பந்துகள் மட்டுமே கொண்ட தி ஹன்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜூலை 2020-ல் தொடங்கவுள்ள 8 அணிகள் கொண்ட குறித்த போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மாவட்ட அடிப்படையிலான Natwest T20 Blast உடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லசித் மலிங்கவுடன், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களான ஷாஹித் அப்ரிடி, ஷாகிப் அல் ஹசன், மொயீன் அலி, பாபர் அசாம், டாம் குர்ரான், குயின்டன் டி கோக், டு பிளெசிஸ், கிறிஸ் கெய்ல், ஆரோன் பிஞ்ச், ரஷீத் கான்.

ஈயோன் மோர்கன், லியாம் பிளங்கெட், கீரோன் பொல்லார்ட், காகிசோ ரபாடா, ஜேசன் ராய், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர். ஆகியோரும் தி ஹன்ரட் வரைவு பட்டியலில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine

இங்கிலாந்து அணி இலங்கை வந்தடைந்தது [VIDEO]

wpengine

ஆஸி தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்…

wpengine