உலக செய்திகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே பதவியேற்பு



பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே, பதவி ஏற்றுள்ளார்.

முன்னாள் உள்துறை செயலாளரான அவர், பக்கிங்ஹேம் மாளிகையில் மகாராணியாரிடம் இருந்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அழைப்பை பெற்றுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் நேற்றுடன் பதவி விலகினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியயேறியதை அடுத்தே அவர் பதவி விலகினார்.

இந்த நிலையில் தெரேசா மே, பிரித்தானியாவின் புதிய பிரதமராகியுள்ளார்.

அவர் பிரித்தானிய பிரதமராக பதவி ஏற்கும் இரண்டாவது பெண்ணாவார்.

இதற்கு முன்னர் மார்க்ரட் தச்சர் பிரத்தானியாவின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமானங்களில் இனி Laptop எடுத்துவர தடை – அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் அரசும் அதிரடி…

wpengine

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு…

wpengine

பிரான்ஸ் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் கைது..

wpengine