கேளிக்கை

பிரிட்டன் தேசிய திரைப்பட விருது – சிறந்த படத்துக்கான விருதை தட்டிச் சென்ற மெர்சல்…



பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

அட்லி இயக்கிய விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இப்படம் வெளியாகும் முன்பே, டீசர், டிரைலர், பாடல்கள், என பல சாதனைகளை படைத்தது. தற்போது இப்படத்திற்கு பிரிட்டன் நாட்டில் பெரிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.

பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது.

Related posts

இறுதிக்கட்ட பணிகளில் ‘வலிமை’ படக்குழுவினர்

wpengine

‘நான் பாட்டி ஆகிவிட்டேன் – மகிழ்ச்சியில் ராய் லட்சுமி… (photos)

wpengine

நயனுக்கு HBD

wpengine