கேளிக்கை

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு…



(FASTNEWS|COLOMBO) இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு நேற்று(06) ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி, இவர் தனது காதலி மேகனை கடந்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி மணந்தார்.

இந்நிலையில், இளவரசி மேகனுக்கு நேற்று(06) பிரிட்டன் நேரப்படி காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எடையில் குழந்தை அழகாக இருப்பதாகவும் பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்னுடைய பிரியத்துக்குரிய தோழியான இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை தனது குழந்தைக்கு ஞானத்தாயாகவும், நிக் ஜோனாஸ்சை ஞானத்தந்தையாகவும் அமர்த்திக்கொள்ள மேகன் பரிசீலிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Facebook மற்றும் Instagram முடங்கியது.. – வருந்துகின்றது நிறுவனம்..

wpengine

8 மணிநேரத்தில் சாதனை படைத்த அனிருத்தின் பாடல்…

wpengine

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து முகமூடியாக நடிகர் விஜய் மெரினாவில்… [PHOTOS]

wpengine