உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா விஜயம்.


இந்திய கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) இந்தியா பயணமாகிறார்.

குறித்த இம்மாநாடு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. 8வது தடவையாக நடைபெறும் இந்த மாநாட்டுக்கு இந்த முறை இந்தியா தலைமை தாங்குகிறது.

இந்த மாநாட்டில் பிரிக்ஸின் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் வங்காள விரிகுடாவின் பிம்ஸ்டாக் என்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டு என்ற அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த பயணத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டு தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் அரசியல் குறித்து கலந்துரையாட ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூடுகிறது…

wpengine

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன [PHOTOS]

wpengine

7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்..!

wpengine