உள்நாட்டு செய்திகள்

பிரான்ஸ் தேடுவது மஹிந்தவை போன்றதொரு தலைவரையே – விமல்



இலங்கையில் 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த தலைவர் தற்போது நீதிமன்றம் மற்றும் ஆணைக்குழுக்களின் பின்னாடி செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷவை போன்ற ஒரு தலைவரை பிரான்ஸ் தேடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்ததினத்திற்கு அடுத்த நாள் அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணைக்குழுவில் அன்றைய தினம் எவ்வாறான கேக் வெட்டப்படவுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Related posts

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்…

wpengine

கொரோனா தொடர்பில் விசேட கலந்துரையாடல்

wpengine

தேர்தலில் எக்கட்சியில் போட்டியிடுவதென இன்னும் தீர்மானிக்கவில்லை – திஸ்ஸ

wpengine