உலக செய்திகள்

பிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து…



பிரான்ஸில் மிராஜ் வகையைச் சேர்ந்த சிறிய ஜெட் விமானம் ஒன்று மலையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமான பணியாளர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விபத்திற்குள்ளான குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஜூரா பிராந்தியத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சுமார் 3,280 அடி பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானம் மோதுண்டதிலிருந்து விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் நிலவும் கடும் பனியுடனான வானிலை காரணமாகவே விபத்து ஏற்றபட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட முதல் பைபிள் ஏலத்தில்

wpengine

பிரேஸிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்துக்கு

wpengine

மீண்டும் இருளில் மூழ்கிய வெனிசூலா

wpengine