கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகருடன் நித்யாமேனன்…


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நித்யா மேனன், முதல் முறையாக பாலிவுட்டில் பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்கவுள்ளார்.

விஜய் நடித்த மெர்சலில் காஜல் அகர்வால், சமந்தாவை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டவர் நித்யா மேனன். மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது தி அயர்ன் லேடி எனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தயாராகிவருகிறார்.

அதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதியுடன் சைக்கோ எனும் படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தியில் நடிகர் அக்‌‌ஷய் குமார் நடிக்கும் “மி‌ஷன் மங்கள்” எனும் படத்திலும் நடிக்கவுள்ளார் நித்யா. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து தயாராகும் இந்தப்படம் ஒரு விண்வெளிப் படமாக உருவாகிவருகிறது.

இப்படத்தினை ஜெகன் ‌ஷக்தி இயக்கவுள்ளார். இந்த படத்தில் இணைந்ததன் மூலம் ஆங்கிலப்படம் தொடங்கி தமிழ் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்ட நித்யா மேனன் முதன்முறையாக இந்தியில் நுழைகிறார்.

இதில் அவருடன் இணைந்து வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்கா, டாப்சி என இந்தி முன்னணி நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.

Related posts

காயங்களுடன் தலைகீழாக தொங்கிய பிரபல நடிகை [PHOTO]

wpengine

21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து

wpengine

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அடிமையான பாலிவுட் நடிகர்…

wpengine