கேளிக்கை

பிரபல நடிகருடன் இணைகிறார் சாய் பல்லவி…



செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியாக தயாராகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரி இரண்டாவது பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருப்பதாகவும், படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தீரன் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் ரகுல் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் செல்வராகவன் – சாய் பல்லவி இடையே இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு சாய் பல்லவி ஒத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்பே, சாய் பல்லவி, தான் ஒரு சூர்யா ரசிகை என்றும், அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வ ராகவன் தற்போது சந்தானத்தை வைத்து `மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா படத்தை இயக்க இருக்கிறார்.

Related posts

கனடாவில் மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை

wpengine

Spider Man 3D தொழில்நுட்பத்தில் எதிர்வரும் ஜூலையில்

wpengine

கிம் முன்னிலையில் புஷா டீ நீண்ட நாள் ஆசை நாயகனின் கரம் பிடித்தார்…

wpengine