உள்நாட்டு செய்திகள்

பிரபல தொழிற்சங்கங்கள் எட்டு நாடுதழுவிய போராட்டத்திற்கு ஆயத்தம்..?



சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் இலங்கை அரச மருத்துவ சங்கம் (GMOA) உள்ளிட்ட பிரபல தொழிற்சங்கங்கள் எட்டு மே மாதம் முதல் வாரம் தொடக்கம் நாடுதழுவிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

அதன்படி அரச மருத்துவ சங்க அதிகாரிகளது மத்திய செயற்குழுக் கூட்டமானது நாளை(26) கூடவுள்ளதாகவும் அதன்போது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வங்கி, துறைமுகம், கல்வி,பெற்றோலியம், போக்குவரத்து, நீர் மற்றும் மின்சாரம் ஆகிய தொழிற்சங்கங்களே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய சங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(rizmira)

Related posts

விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்

wpengine

முதலமைச்சர் பேசலுக்கு எதிராக 17 உறுப்பினர்கள் சத்திய கடதாசி..

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine