உள்நாட்டு செய்திகள்

பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஒன்றும் சம்பிரதாய சடங்கல்ல – எஸ்.பி



பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாய சடங்கல்ல என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பிரதாயமல்ல என்பதனால் அது எங்களுக்கு அவ்வளவு முக்கிய இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக பிரதமர் வேட்பாளராக பெயரிடப்படுவார் என குமார் வெல்கம குறிப்பிட்டமை தொடர்பில், அமைச்சர் எஸ்.பி .திஸாநாயக்கவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து நாங்கள் விசேட அவதானம் செலுத்துவதில்லை.

போட்டியிடுவது பெரிய பிரச்சினையாக எங்களுக்கு தோன்றவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிவாரணங்கள் மக்களுக்கு வழங்குவோம்… – நாமல் ராஜபக்ஷ..

wpengine

அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு…

wpengine

ஆதரவளியுங்கள் – பிரதமர் உதயகம்மன்பிலவிற்கு கடிதம்!

wpengine